திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் 20/10/2024 அன்று காலை 11 மணியளவில் பந்தாரப்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் வணிக வரித்துறை அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகி கள் பொறுப்பாளர்களுக்கு கிளைக் கழக நிர்வாகிகள் பிரதிநிதிகளுக்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அயராது உழைத்து அதிமுக அரசு வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்கள். மேலும் மெத்தனப் போக்கில் செயல்படும் நிர்வாகிகள் பொறுப்பாளர்களை நீக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார் கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போது திமுக அரசு செயல்படுத்தி வருகின்றது. மேலும் அதிமுக அரசு கொண்டு வந்த ரயில்வே மேம்பாலங்கள் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் நாட்றம் பள்ளி தாலுக்கா அலுவலகம் கொண்டு வந்தது அதிமுக அரசு வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூர் மாவட்டமாக கொண்டு வந்தது அதிமுக அரசு அனைவரு க்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தையும் சுமார் 2000 கோடி மதிப்பீட்டில் அதிமுக அரசு செயல்படுத்தி திட்டத்தை தான் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என விமர்சனம் செய்தார்கள். உடன் ஒன்றிய கழக செயலாளர் நகர செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர்கள் கிளைக் கழக செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் பெண்கள் பாசறை அணியச் சேர்ந்த நிர்வாகி கள் பொறுப்பாளர்கள் மற்றும் 1000க்கு கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0