ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
13 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கிருண்ணனுன்னி விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி 238 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.13 சுற்றுகள் முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால் காவல்துறையினருடன் செய்தியாளர்கள் வாக்குவாதம் செய்தனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுவரை வேட்பாளர்கள் வெற்றி பெற்றது தொடர்பாக அதிகாரபூர்வ பட்டியலை இதுவரை தரவில்லை
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு காரணமாகவே வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் கிருண்ணனுன்னி விளக்கம் அளித்தார்.
வாக்கு எண்ணிக்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகிறது. அனைத்து கட்சியை சேர்ந்த முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் இருக்கின்றனர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சரியான வாக்குகளை உறுதிப்படுத்திக் கொண்டு தான் கூற முடியும் அப்படி கூறாவிட்டால் அதுவும் தவறாகி விடும்.
செய்தியாளர்களைப் பொருத்தவரை மீடியா கம்யூனிகேசன் அறை திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட உடன் முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்தடுத்த சுற்றுகளில் எண்ணப்படும் வாக்குகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தெரிவித்தார்.