கோவை; தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது. அப்போது அனைத்து மதத்தினருடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைக்கப் பட்டது. இதையொட்டி காவல் துறையைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு என்று தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பரிசுகள் வழங்கினார். இந்த விழாவில் கலந்து கொண்ட காவல் துறை அதிகாரிகள் காவலர்கள் அவரது குடும்பத்தினருடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0