அலுவலகத்தில் தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்பு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இ.டி.ஐ இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்புக்கான பாடத் திட்டம், முக்கியத்துவம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் பட்டயபடிப்பு தொடர்பான கூட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் உமாசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்,கல்லூரி மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். ஏற்கனவே இதற்கான கூட்டம் மதுரையில் நடைபெற்ற நிலையில் கோவையில் நடைபெற்றது வரும் 22 – ம் தேதி அன்று திருச்சியில் நடைபெற உள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இ.டி.ஐ.ஐ நிறுவனத்தின் இயக்குனர்

கூடுதல் தலைமைச் செயலாளர் உமாசங்கர் கூறியதாவது:-

இந்த ஓராண்டு படிப்பில் கலந்து கொள்ள மாணவர்கள் கட்டாயமாக பட்டயப் படிப்பு படித்து இருக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு வயது வரம்பு 30 – க்குள் இருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்த பயிற்சிக்கு 500 மாணவர்கள் மட்டுமே சேர முடியும் என்றும் அதில் ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதி 60% தேர்ச்சி பெற வேண்டும்,நேர்காணலில் 40% பெற்றால் மட்டுமே இந்த படிப்பில் சேர முடியும் என்று கூறினார். இந்தப் படிப்பை வெளியில் சென்று படித்தால் 5 மடங்கு கட்டணம் அதிகமாக இருக்கும் என்றும் மாணவர்கள் இதில் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் பயிற்சி பெறும் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கும், தொழில் முனைவர்களாக மாற்றுவதற்காக பயிற்சியாக இருக்கும். கடந்த 24 ஆண்டுகளாக இ.டி.ஐ அகமதாபாத் நிறுவனம் இந்த பயிற்சியை வழங்கி வருவதாகவும் 50 சதவீதம் அகமதாபாத் நிறுவனம் பாடம் எடுக்கும் மீதம் 50% பாடத்தை தமிழ்நாடு பேராசிரியர்கள் பாடம் நடத்துவார்கள் என்று கூறினார். தற்போது வரை அகமதாபாத் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 79 சதவீதம் தொழில் முனைவராக உருவாகி உள்ளார்கள். இ.டி.ஐ இந்தியா அகமதாபாத் நிறுவனம் நடத்தி வரும் கல்வி முறையில் செய்முறை பயிற்சி வழியாகவே அதிகமாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள்.
இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக இ.டி.ஐ.ஐ தமிழ்நாடு நிறுவனத்தின் இணையதளம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு எந்த விதமான விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று கூறினார். இந்த பட்டயப் படிப்பானது வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது என்று தெரிவித்தார்.