இ -சேவை மையத்தில் துணிகரதிருட்டு.

கோவை போத்தனூர் மகாலிங்கபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பங்கஜம் (வயது 62) இவரது மகன் மகாலிங்கபுரத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். கடந்த 16ஆம் தேதி மையத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது ஷட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளேசென்று பார்த்தபோது அங்கிருந்த கம்ப்யூட்டர் ,டி .வி .ஆர் பணம் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.