கோவையை சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் .இவர் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். சிக்கிம் மாநிலத்தில்லாட்டரி விற்பனையில் முறைகேடுசெய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டுகளில் 2 முறை மார்ட்டின் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது.அந்த ஆவணங்களை வைத்து மேலும் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதன்படி நேற்று முன்தினம் கோவைதுடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் உள்ளமார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் ஹோமி யோபதி கல்லூரி ஆகிய 3 இடங்களில் 5 கார்களில் வந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தவிர நேற்று மேற்கண்ட 3 இடங்கள் மற்றும் கோவை சிவானந்த புரத்தில் உள்ள மார்ட்டின் மனைவியின் அண்ணன் ஜான் பிரிட்டோ வீடு, சிவானந்த காலனியில் உள்ள தங்கை அந்தோணியா வீடு ஆகிய 2 வீடுகளில் என 5 இடங்களில் நேற்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் இந்த சோதனையின் போது வீடுகளில் உள்ளே இருந்த யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை உள்ளேயும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 2-வது நாளாக நேற்று 5 இடங்களில் இரவு 10 மணி வரை சோதனை நீடித்தது இந்த சோதனையின் போது வீடுகளில் இருந்த கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப்பில் இருக்கும் ஆவணங்களை சோதனை செய்தனர். அத்துடன் இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களும் சிக்கி உள்ளது. ஏற்கனவே சென்னையில் உள்ள மார்ட்டின் அலுவலகத்திலிருந்து ரூ.8 கோடி 80 லட்சம் சிக்கியதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0