திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணிய மர்த்தும் நோக்கத்தோடு சேஷாயி தொழில்நுட்ப பயிலக வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் அன்பில் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப் பட்ட வேலை நாடுநர்களுக்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணிநியமன ஆணைகளை வழங்கி பாராட்டி, சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார். மண்டல தலைவர் மதிவாணன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சுரேஷ், துணை இயக்குநர் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் திருமதி.மகாராணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் .எஸ்.மாசில் ஆஷா, சேஷாயி தொழில்நுட்ப பயிலகத்தின் நிர்வாகி ரவீந்திரன், தனியார் துறை நிறுவனங்களின் நிருவாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0