மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹீம் (வயது 41 )தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று துடியலூர் வெள்ளக் கிணறு பிரிவு அருகே வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன்அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.