சூலூரில் பிவிசி பந்தல் அமைக்கும் பணியை மேற்கொண்டு வரும் சூலூர் பிஜேபி பிரமுகரின் அண்ணன் புருஷோத்தமன் (வயது 55 ) என்பவர் சூலூர் அருகில் உள்ள செங்கத்துறையில் கண்ணன் என்பவரின் இல்ல விசேஷத்திற்காக பிவிசி பந்தல் அமைத்திருந்தார் நிகழ்வு முடிந்து. பந்தலை அகற்றும் பணியினை செய்து கொண்டிருந்தார் பந்தலின் மேலே உள்ள இரும்பு பைபை இறக்கிய போது அந்த இரும்பை மேலே சென்று கொண்டிருந்த அதிக திறன் கொண்ட மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அருகில் உடன் பணி செய்து கொண்டிருந்த நண்பர்கள் உடனடியாக சூலூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் அங்கு பணியில் இருந்த மருத்துவர் மின்சாரம் தாக்கிய புருஷோத்தமனை பரிசோதனை செய்துவிட்டு அவர் இறந்து. விட்டதாக தகவல் தெரிவித்தார். உடனடியாக சூலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆய்வாளர் லெனின் உத்தரவின் பெயரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்த்து விசாரணை நடத்தி பிரேதத்தை உடல் கூறு ஆய்வுக்காக கோயமுத்தூர் ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

What’s your reaction?
Love0
Sad7
Happy0
Sleepy0
Angry0
Dead1
Wink0