டாக்டர் வீட்டில் நகை திருடிய எலக்ட்ரீசியன் கைது

கோவை அருகே உள்ள காளப்பட்டி, காட்டூர் வீதியைச் சேர்ந்தவர் கவுதம். இவரது மனைவி லாவண்யா (வயது 37) பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார், இவரது வீட்டில் தஞ்சாவூர் கும்பகோணம் மருதநல்லூரை சேர்ந்த சிவ சங்கரன் என்ற கார்த்தி வயது 37 என்பவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார்.திடீரென்று வீட்டில் பீரோவில்இருந்த தங்கத் தாலி செயின், நெத்திச்சுட்டி ஆகியவற்றை காணவில்லை.இதுகுறித்து லாவண்யா கோவில் பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் வழக்கு பதிவு செய்து எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்த சிவசங்கரன் என்ற கார்த்தி (வயது 37) என்பவரை கைது செய்தார் .இவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டது.இவர் தற்போது கோவில்பாளையம் ஆண்டக்கா பாளையத்தில் தங்கி உள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.