மின்சார பாதுகாப்பு வாழ்க்கை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்.

கோவை சரவணம்பட்டி விளையாட்டு பூங்காவில் மின் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து. கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மின் ஆய்வில் மின்சார நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு பார்க்குகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் மின்சார ஒயரிங் அமைப்புகள் குறித்து, சிறந்த உபகரணங்களைக் கொண்டு ஆய்வு செய்து மின் விபத்தில்லாதவாறு இயங்க சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் பொறுப்பாளர்களுக்கு மின்சார விபத்து தடுப்பு சாதனங்கள் பற்றியும் முறையான வயரிங் பற்றியும் மின்சார உபயோகம் பற்றி மின்சார பாதுகாப்பு வாழ்க்கை பாதுகாப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி சின்னவேடம்பட்டி அண்ணா நகரில் ராமன் விஹாரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் காவல் துறை உதவி ஆணையர் செல்வதங்கம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். குடியிருப்பு நிர்வாகிகள் தலைவர் பிரிகேட்டியர், நாராயணன், செயலாளர் லெப்டினட் ஜெயகரன், பொருளாளர் குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டார் . நிகழ்ச்சியில் மின்சார பாதுகாப்பு குறித்து செயல் தலைவர் அய்யாசாமி, செயலாளர் துரைசாமி, மின்சார பாதிப்பு குறித்து தேவபாலன் சந்திரமோகன் பாலமோகன், பாதிப்புகளுக்கான தீர்வுகள் குறித்து சௌந்தர்ராஜன் ஆகியோர் குடியிருப்பு வாசிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். பாலசுப்பிரமணியம் மற்றும் முத்துக்குமார் நன்றியுரை வழங்கினர்.