உயர்ரகபோதை மருந்து – கத்தியுடன் முதியவர் கைது

கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா நேற்று ரத்தினபுரி லட்சுமிபுரம், டெக்ஸ் டூல் பாலம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப் படும்படும் நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 2.5 கிராம் மெத்தம்பேட்டமின் ” என்ற உயர் ரகபோதை மருந்து மற்றும் கத்தி, பணம் ரூ. 4500 பறிமுதல் செய்யப்பட்டது. இதை யடுத்து இவர் கைது செய்யப்பட்டார். விசாரணை யில் இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற தம்பி ராஜா என்ற ராஜா பிரகாஷ் காட்வின் ( வயது 20) என்பது தெரியவந்தது. இவர் தற்போது சென்னை அசோக் நகர், மாந்தோப்பு காலனியில் வசித்துவருகிறார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.