நீலகிரி ஆண்டுதோறும் மகளிர் தினத்தில் பெண்களால் வரையப்பட்ட ஓவியங்களை உதகையில் ஷேரிங் கிராஸ் அருகில் அமைந்துள்ள சோலோ ஆர்ட் கேலரியில் ஓவிய கண்காட்சி திறக்கப்பட்டது. கண்காட்சியை அட்கோ இயக்குனர் சபிதா போஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். ஆக்ஸ்போர்ட் கான்டினென்டல் பள்ளியின் முதல்வர் பத்மினி சுரேஷ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார், இந்த ஓவிய கண்காட்சியில் பலவகை வண்ணங்களைக் கொண்டு அழகிய ஓவியங்கள் பல்வேறு தலைப்புகளில் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பெண்கள். அகில இந்திய அளவிலும் கேரளா மற்றும் தமிழக சார்ந்த 30 பெண்கள் பங்கேற்கும் இந்த ஓவிய கண்காட்சியில் ஒவ்வொரு ஓவியரும் தங்களுடைய இரண்டு படைப்புகளை பெண்ணியம் சார்ந்த தலைப்புகளில் பலவகை ஓவிய நுட்பங்களுடன் வரைந்து உள்ளனர்,
இந்த ஓவிய கண்காட்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர்கள் இடம்பெற்றுள்ளது, இந்த ஓவியங்கள் ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சம் வரைக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது, மற்றும் மத்திய மாநில விருதுகளை பெற்று ஓவியர்கள் பங்கு பெற்று தங்கள் ஓவியங்களை காட்சியில் பதிவிட்டுள்ளனர், இதுபோன்ற ஓவிய காட்சிகளை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நடத்தி வருகிறோம் என்று சோலோ ஆர்ட் கேலரியின் உரிமையாளர் மற்றும் ஓவியர் கூறினார்,
இந்த ஓவிய கண்காட்சி விழா மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்காகவே சிறப்பாக செய்யப்பட்டுள்ளது இந்த கண்காட்சியை கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்தியவரும் இந்த கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சோபா பிரேம்குமார் அவர்களும் ஒரு பிரபல ஓவியர் மற்றும் குழந்தைகளுக்கு கதை சொல்லியாகவும் திகழ்ந்து வருபவர். இந்த கண்காட்சி கடந்த ஆண்டுகளில் திருப்பூர் கோவை தலச்சேரி போன்ற நகரங்களில் நடத்தப்பட்டு இந்த ஆண்டு மீண்டும் ஊட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பார்வைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சோலோ ஆர்ட் கேலரியில் நடைபெறும் கண்காட்சியானது 8, 3 2024 முதல் 17, 3 2024 வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். அனுமதி இலவசம்,நடைபெற்ற சோலோ ஆர்ட் கேலரி ஓவிய கண்காட்சிக்கு திரளான பெண்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0