கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஸ்ரீ ராம் நகர் சேர்ந்தவர் குணசிங் (வயது 54) இவரது மகள் அன்சி டெனிட்டா (வயது 19) ரேஸ்கோர்ஸ் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை குணசிங் மது மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் மது அருந்தி விட்டு அவரது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வாராம். இந்த நிலையில் கடத்த 1-ந் தேதி மகள் அன்சிடெனிட்டா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது குடி போதையில் அங்கு வந்த குணசிங் மகளிடம் தவறாக நடக்க முயன்றார். இதை தயாரிடம் கூறினார். அவரது தாயார் கணவரை தட்டி கேட்ட போது குணசீலன் கத்தியால் ஆன்சிடெனிட்டாவை குத்தினார் .பின்னர் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து சேதபடுத்தினார். இதுகுறித்து போத்தனூர் போலீசில் மகள் அன்சிடெனிட்டா புகார் செய்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,கொலை மிரட்டல் ‘மானபங்கம் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0