குடிபோதையில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல். கணவர் கைது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, தண்டபாணி நகர், எல்.ஐ.சி .காலனியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் ( வயது 37) இவரது மனைவி லாவண்யா ( வயது 24) இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார். ரஞ்சித் குமார் குடிப்பழக்கம் உடையவர் .இதனால் இவர்களுக்குஇடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி லாவண்யா கோபித்துக் கொண்டு கம்பர் வீதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார் .இதை அறிந்த ரஞ்சித் குமார்நேற்று அங்கு சென்று மனைவியைவீட்டுக்கு வருமாறு அழைத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது .இதுகுறித்துலாவண்யா மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து கணவர் ரஞ்சித் குமாரை கைது செய்தார் .இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், உட்பட 3 பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.