கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆலாந்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் போலீசார் நேற்றுஇக்கரை போளுவாம் பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்திபோதைப் பொருள் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்தசரவணகுமார் ( வயது 26 )பிரசாந்த் ( வயது 30) பி. என். புதூர் அமரன் ( வயது 30) பெங்களூரு ஜோனோ தன் சதீஷ் ( வயது 31) சாய்பாபா காலனி நிஷாந்த் ( வயது 23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதில் 4′ வகையான 600 கிராம் போதை காளான், அதிக போதை தரும் உயர் ரக கஞ்சா , கூலிப் 12 கிலோ, 2 மடிக்கணினி, 6 செல்போன், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து உயர்ரக கஞ்சா போன்ற போதை பொருட்கள் வரவழைக்கப்படுகிறது .அதன் சந்தையின் மதிப்பு ஒரு கிராம் ரூ 5 ஆயிரம் அங்கிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளோம். இதில் மேலும் யார்? யார்? தொடர்பு உள்ளது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .போதை பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து கொரியர் மூலமாக பெற்றது தெரியவந்துள்ளது. போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க கடந்த 3 மாதங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள அறைகளில் பெரிய அளவில் 2 முறை சோதனை நடத்தப்பட்டது. கோவையில் போதை பொருட்கள் இல்லாத நிலையை ஏற்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான அமைப்பை உருவாக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது .இவ்வாறு அவர் கூறினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0