கோவையில் போதைப்பொருள் விழிப்புணர்வு மராத்தான். கலெக்டர் – கமிஷனர் – 1000 காவலர் பங்கேற்பு.

கோவை: போதைப்பொருள் -மற்றும் புகையிலை பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் கோவை மாநகர காவல் துறை மற்றும்கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் விழிப்புணர்வு மராத்தான் இன்று நடந்தது. இதில் 1000 காவலர்கள் பங்கேற்றனர். மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை 6 மணிக்கு இந்த மராத்தான் போட்டி தொடங்கியது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உறுதிமொழி வாசித்து,கொடியசைத்து ஏற்று இதை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன்,மாநகராட்சி ஆணை யாளர் சிவகுரு பிரபாகரன்,மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் பாலுசாமி,ஆகியோர் பங்கேற்றனர்.