வன பகுதியில் அனுமதி இன்றி படம் பிடித்த டிரோன் கேமரா பறிமுதல்…

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு தைப்பூச திருவிழா நடந்து வருகிறது. மருதமலை கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது .இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி இரவு 8 – 30 மணி அளவில் மருதமலையில் நடைபெற்ற தைப்பூச விழாவை டிரோன் கேமரா மூலம் தனியார் நிறுவனத்தினர் வீடியோ மற்றும் படம் எடுத்தனர். இது குறித்த தகவலின் பேரில் கோவை வனச்சரகர் திருமுருகன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று டிரோன் கேமராவை பறிமுதல் செய்தனர் .அந்த தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை நடத்தினர். இதை பரிசோதித்து பார்த்த போது கோவில் நிகழ்ச்சிகளை மட்டும் இல்லாமல் மருதமலையை சுற்றி அடர்ந்த வனப்பகுதியிலும் படம் எடுத்த காட்சிகள் பதிவாகி இருந்தது.வனப்பகுதியில் அனுமதி இன்றி கேமராவை இயக்கியதாலும், அடர்ந்த வனப் பகுதியை படம் பிடித்ததாலும் டிரோன் கேமராவை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்..இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.