கோவை : தென்காசி மாவட்டம் ,அச்சன்புதூர், நெடுவயல் பகுதியை சேர்ந்தவர் மாரி துரை (வயது 47 சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார்.இவர் நேற்று ராஜபாளையத்திலிருந்து அரிசி பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு வந்திருந்தார்.கோவை சிங்காநல்லூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு அரிசி கடையில் அரிசி மூட்டைகளை இறக்குவதற்காக கடையின் முன் லாரி நிறுத்தி இருந்தார் .மூட்டைகளை இறக்குவதற்கு தொழிலாளி வராததால் லாரி மூட்டை மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார் . அப்போது, தூக்க கலக்கத்தில் லாரியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0