கோவை: நீலகிரி மாவட்டம்,குன்னூர் தூதுர் மட்டத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன் .இவரது மகனே இளையராஜா ( வயது 32 )லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனம் உடைந்த இளையராஜா ஊட்டி மெயின் ரோட்டில் கல்லார் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரைசிகிச்சைக்காக காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவி ஜெயந்தி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0