டேங்கர் லாரியில் இருந்து சிலிண்டர் விழுந்த வழக்கில் டிரைவர் கைது செய்து சிறையில் அடைப்பு.

கோவை உப்பிபாளையம் அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தில் நேற்று அதிகாலையில் கேரளாவில் இருந்து கோவை கணபதிக்கு கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் இருந்து சிலிண்டர் தனியாக கழண்டு விழுந்தது. இதனால் கசிவு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை இடை விடாது பீச்சி அடித்துக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது..மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார், மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்தில் 8 மணி நேரம் முகாமிட்டு சிலிண்டரை அகற்றும் பணியைமேற்பார்வையிட்டனர். 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிலிண்டர் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டது.இதனால் பெரிய ஆபத்து விலகியது.இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் இது தொடர்பாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ,சில ராமபேட்டை , தெற்கு வீதியைச் சேர்ந்தலாரி டிரைவர் ராதாகிருஷ்ணன் (வயது 29)கைது செய்யப்பட்டார் இவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.