திருச்சி மாநகராட்சியில் புதை வடிகால் திட்ட பணிகள் நிறைவு பெற்று கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்படும் முன்பே பல இடங்களில் வடிகால்கள் மண் நிறைந்து மூடப்பட்டு மாயமாகி வருகின்றன. இதுபோல் பணி செய்கின்ற மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதைவடிகால் திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில், இடது ஓரம் முதல் வலது ஓரம் வரை (என்ட் டூ என்ட் முறையில்) தாா் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் மூடப்பட்டு சாலைகள் அமைக்கப்படுவதால், மழை நீா் மற்றும் கழிவு நீா் வடிந்து செல்ல வழியில்லாத நிலை ஏற்படும். புதைவடிகால் திட்டப்பணிகள் முற்றிலுமாக முடிந்து, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் இணைப்புகள் இணைக்கப்பட்டு விட்டால், கழிவுநீா் செல்வதில் தடையிருக்காது. ஆனால் அதற்கு முன்பே, சில இடங்களில் வடிகால்கள் மூடப்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனா். இதனால் சிறு கோடை மழைக்கே தேங்கும் மழை நீா் வடிய வழியின்றி போய்விட்டது.
திருச்சி மாநகராட்சி 34-ஆவது வாா்டு சங்கிலியாண்டபுரம் பகுதியில் இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தற்போது சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், வடிகால் வாய்க்கால்கள் மூடப்பட்டு மாயமாகிவிட்டன. எனவே, வடிகால்கள் வாய்க்கால்களும் அமைப்பது அவசியம் என்கின்றனா் அப்பகுதி வாசிகள். புதைவடிகால் திட்டப்பணிகள் நடந்து முடிந்து கழிவு நீா் இணைப்புகள் இணைக்கப் பட்டாலும், மழை நீா் வடிந்து செல்ல வடிகால்கள் முக்கியம். எனவே அனைத்துப் பகுதிகளிலும் தற்போதுள்ள வடிகால்களை தூா்வாரி சீரமைக்கப்பட வேண்டும். வடிகால்கள் இல்லாத பகுதிகளிலும் வடிகால் வாய்க்கால்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும். மேலும் பிரதான வடிகால் வாய்க்கால்களில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வேண்டும். ஏனெனில் திருச்சி மாநகராட்சியில் உள்ள பிரதான வடிகால் வாய்க்கால்கள் அனைத்துமே பெரும்பாலும் உய்யக்கொண்டால் வாய்க்காலில் சென்று கலக்கின்றன. உய்யக்கொண்டான் மாசடைவதிலிருந்து காப்பதில் மாநகராட்சியின் பங்கு அளப்பறியது என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0