சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்கள் உட்பட 100 பேருக்கு நற்சான்றிதழ்,.கோவை மாவட்ட எஸ்.பி, டாக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் எஸ். பி .டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாதாந்திர குற்ற நிகழ்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். குற்ற வழக்குகளில் துரிதமாக துப்பு துலக்கி குற்றவாளிகளை கண்டுபிடித்து பொருள்களை மீட்ட 13 இன்ஸ்பெக்டர்களு க்கும், 29 சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் , 6 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், 7 ஏட்டுக்களு க்கும் 9 முதல் நிலை காவலர்களுக்கும் 36 போலீஸ்காரர்களுக்கும் என மொத்தம் 100 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
குற்றத்தடுப்பு குறித்து அறிவுரை வழங்கினார்..