பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தை இயக்கிய ஆவண எழுத்தர்கள்

பூந்தமல்லி பதிவுத்துறை தலைவர் நேரடி ஆய்வில் அம்பலம் துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கடந்த வாரம் நடந்த மாதந்திர ஆய்வு கூட்டத்தில் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வுக்கு செல்ல வேண்டும். பதிவுக்கு வரும் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஆவணம் பதிவு செய்தல், ஆவணங்களை உரிய நேரத்தில் ஒப்படைத்தல், போலி மற்றும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பதிவுகளை தடுத்தல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த 20ம் தேதி ( சனிக்கிழமை) சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி சார்பதிவாளர் திருவள்ளூர் பதிவு மாவட்டம் அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது சார்பதிவாளர் பொறுப்பு ஆனந்தி அவரது இருக்கையில் இல்லாமல் இருந்துள்ளார். அவரது இருக்கையின் அருகில் பொதுமக்கள் ஆவணப்பதிவுக்காக சில ஆவணங்கள் வரிசையாக வைத்திருந்தனர். அப்பொழுது அந்த அலுவலகத்துக்கு தொடர் இல்லாத பெண் ஒருவர் அந்த ஆவணங்களில் ஒன்றை எடுத்து அருகில் இருந்த கணினி அறைக்கு சென்று அந்த கணினியில் அலுவலக பணிகளை பதிவுத்துறை ஊழியர்கள் போல் போன்று செய்து கொண்டிருந்தார். அதுபோன்று அலுவலக உதவியாளர் போல் வந்தது பதிவுத்துறை ஐஜி என்று தெரியாமல் எதற்காக இங்கு வந்தீர்கள் என அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். பதிலுக்கு ஐஜி சார்பதிவாளர் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். சார்பதிவாளரை பார்க்க அரை மணி நேரம் காத்திருக்க கூறினார்களார்கள். ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் பொதுமக்கள் போன்று காத்துள்ளார். 15 நிமிடங்கள் வரை சார்பதிவாளர் இருக்கைக்கு வராமல் இருந்துள்ளார். அலுவலகத்துக்கு வந்து இருப்பது பதிவுத்துறை தலைவர் என்பதை ஊழியர்கள் அறியாமல் இருந்துள்ளனர். யாரோ ஒருவர் ஏதோ ஒரு பத்திரபதிவிற்கு வந்திருப்பதை போன்று அவர்கள் நினைத்து பொதுமக்களை போன்று அவரையும் ( தன்னையும்) அலைக்கழித்ததை ஐஜி நேரடியாக பார்த்தார். இதையடுத்து அவர் தன்னை அறிமுகப்படுத்திய போது, பணியில் இருந்த ஊழியர்கள் பதறினர். அவரது நேரடி ஆய்வில் தனியார் ஊழியர்கள் (கிருஷ்ணா) சார்பதிவாளர் இருக்கையில் நேரடியாக வந்து அவர் அருகாமையில் இருந்த ஆவணத்தை எடுத்து கணினி அறைக்கு சென்று பணிகளை மேற்கொண்டிருந்தவர் வக்கீல் அலுவலகத்தை சேர்ந்த பெண் ஊழியர் சுமதி, என்பதும் தெரியவந்தது. அலுவலகத்திற்கு ஆய்வுக்கு பத்திர பதிவுதுறை தலைவர் அலுவலகத்திற்கு வந்திருப்பது தெரிந்து களப்பணிக்கு சென்றதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் அலுவலகத்தில் மற்றொரு கீதா என்ற பெண்ணும், சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசு அலுவலர்களைப் போல பணிபுரிந்தது தெரியவந்தது. பூந்தமல்லி சார் பதிவாளர் அலுவலகம் ஆவண எழுத்தர்கள் மற்றும் வக்கீல்கள் அலுவலக பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருவதையும், அரசு அலுவலகத்திற்கு தொடர்பு இல்லாத நபர்கள் அலுவலகத்தை இயக்கி வருவது ஐஜி கையும் களவுமாக பிடித்தார். பொறுப்பு இளநிலை உதவியாளர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கேமரா ஆபரேட்டர் மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணத்தை எடுத்து அரசு அலுவலர் போல செயல்பட்டுக் கொண்டிருந்த நபர்கள் பார் கவுன்சில் மூலமாக நடவடிக்கையும் எடுத்திட வேண்டும். அதுவரையில் அந்த அலுவலகத்தில் இருந்து வரக்கூடிய ஆவணங்களை ஆய்வு செய்திட வேண்டும். மாவட்ட பதிவாளர். இது தொடர்பாக விசாரணை நடத்தவும், பொறுப்பு சார்பதிவாளர் ஆனந்தி உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். உட்பட இதர ஊழியர்கள் மீது துறை ரீதி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.