திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்புச் செயலாளா் மருத்துவா் அருளீஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், திருச்சி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் நிரந்தர மருத்துவா்கள் 23 பேருக்கு கடந்த 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். எனவே, மருத்துவா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குவதுடன், இனிவரும் காலங்களில் காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக ஆா்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்ட செயலாளா் மருத்துவா் தங்கவேலு, மாநில நிா்வாகி காா்த்திகேயன் உள்ளிட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா். மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தால் அரசு மருத்துவமனை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0