திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்.

சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் திருச்சியில் அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) திருச்சி கிளை சாா்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் கருப்புப்பட்டை அணிந்து பணிகளைப் புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டனா். சங்க மாநிலப் பொருளாளா் த. அருளீஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ. தங்கவேல், அவைத் தலைவா் எம். முத்துராஜா, ஐஎம்ஏ திருச்சி கிளைத் தலைவா் அஷ்ரப் முன்னாள் மாநிலத் தலைவா் குணசேகரன் கிளைச் செயலா் முகேஷ் மோகன் உள்பட சுமாா் 150 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மருத்துவா் டி.எம். பிரபு நன்றி கூறினாா். இதுதொடா் பாக அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கப் பொருளாளா் த. அருளீஸ்வரன் அரசிடமிருந்து உறுதியான அறிவிப்பு வெளியாகும் வரை திருச்சி மாவட்டத் தில் உள்ள மருத்துவா்கள் ஆய்வு கூட்டங்கள் வெளிப்புற மருத்துவ முகாம் பணிகள் செல்வது, காப்பீடு திட்டப் பணிகள் வகுப்புகள் எடுப்பது தினசரி அறிக்கை அனுப்பும் பணிகள் ஆகியவற்றை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும். நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டும் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் இணைய வழியில் நடைபெறும் செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அரசு மருத்துவமனைகளுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பை மாநிலம் முழுவதும் விரைந்து நடை முறைப்படுத்த வேண்டும் என்றாா். சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.