ஜார்கண்டில் பள்ளி ஒன்றில் மாணவர்களை ஃபெயில் ஆக்கிய ஆசிரியரை மாணவர்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதும், அதில் சிலர் ஃபெயில் ஆவதும் சகஜமான ஒன்றுதான். ஆனால் சில சமயம் மாணவர்கள் சிலர் ஃபெயிலான விரக்தியில், ஆசிரியர், பெற்றோர் திட்டியதால் மன விரக்தியில் தவறான முடிவுகளை எடுப்பதும் உண்டு.
ஆனால் ஜார்க்கண்டில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் 9ம் வகுப்புக்கு ஆசிரியராக ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் நடந்த பருவத்தேர்வில் சரியாக தேர்வு எழுதாத 11 மாணவர்களுக்கு அவர் குறைந்த மதிப்பெண்களே அளித்துள்ளார்.
இதனால் ஃபெயிலான அந்த மாணவர்கள் ஆசிரியர் மீது கோபம் கொண்டுள்ளனர். இதனால் மாணவர்கள் சேர்ந்து ஆசிரியரை பிடித்து மரம் ஒன்றில் கட்டி வைத்து “எங்களையே ஃபெயில் ஆக்குவியா?” என அடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் குறித்து பள்ளி நிர்வாகம் புகார் அளிக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.