வால்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக சார்பாக டாக்டர் அம்பேத்கரை இழிவு படுத்திய தாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பதவிலகக்கோரி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வால்பாறை நகரச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் திம்பம் பட்டி ஆறுச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் ஈ.கா.பொன்னுச்சாமி, ஜே.பி.ஆர்.என்ற பாஸ்கர்,கோழிக்கடை ந.கணேசன், செல்வி விஜய ராஜன், நகர துணைச்செயலாளர் சரவண பாண்டியன் மற்றும் மாவட்ட, நகர,சார்பு அணி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.