திமுக எம்பி கதிர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகத்தில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக எம்பி கதிர் ஆனந்த் அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இந்த சோதனையில் ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட சில ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகவும், ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜனவரி 22ஆம் தேதி கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனை ஏற்று திமுக எம்பி கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0