திருச்சி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் தீண்டாமை உறுதிமொழி வாசித்தார் அதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்டம் ஆரம்பித்ததும் திருச்சி மாநகராட்சி 63 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் பொற்கொடி பேசத் தொடங்கினார்.
அப்போது அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த இனிப்புகள் அடங்கிய பாக்ஸ் ஒன்றை எடுத்து மேயரின் தவாலியிடம் கொடுத்து மேயர் அன்பழகனிடம் கொடுக்கச் சொன்னார். மேயர் அன்பழகன் அதை வாங்கி திறப்பதற்கு முற்பட்ட அதே நேரம் மாமன்ற உறுப்பினர் பொற்கொடியை பார்த்து எனக்கு மட்டும் ஏன் தனியாக இனிப்பு பாக்ஸ் தருகிறீர்கள் என்று கேட்டார். யாரும் எதிர்பாராத திருப்பமாக பதில் அளித்த மாமன்ற உறுப்பினர் பொற்கொடி எங்கள் வார்டு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தொடர்ந்து மாமன்றத்தில் நான் எத்தனையோ முறை முறையிட்டு வருகிறோம்.
எங்கள் குறைகளை இதுவரை நீங்கள் நிறைவேற்றி தரவில்லை ஆகவே எங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தவே எங்கள் வார்டு மக்கள் சார்பில் உங்களுக்கு நான் அல்வா தருகிறேன் என்று கூறிவிட்டு மாநகர கூட்ட மன்றத்தை விட்டு வெளியேறினார். கவுன்சிலர் பொற்கொடியின் இந்த பேச்சை கேட்ட மேயர் அன்பழகன் ஸ்வீட் பாக்ஸை திறக்காமல் அப்படியே அதை நகர்த்தி வைத்துவிட்டார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக மாமன்ற உறுப்பினரே திமுகவைச் சேர்ந்த மேயருக்கு அல்வா பார்சல் கொடுத்து மாமன்றத்தை விட்டு வெளியேறியது மாநகராட்சி மன்றத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0