ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்த தி.மு.க. பிரமுகர் போலீசில் ஒப்படைப்பு.ரூ 42 ஆயிரம் பறிமுதல்

கோவை நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 37 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் பிரதான கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரம் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு யுக்திகளை கடைபிடித்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவையை அடுத்த துடியலூர் சுப்பிரமணியம்பாளையம் 15- வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் பரவியது. இதை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதற்குள் ஓட்டுக்கு பணம் கொடுத்த 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அதில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் மடிக்கி பிடித்தனர். அவரது பெயர் மனோஜ் (வயது 23) என்பதும் அவர் திமுக வை சேர்ந்த சம்பத் என்பவ…