நீலகிரியில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆய்வு..!

நீலகிரி மாவட்ட உதகையில் தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களை மாவட்ட பொறுப்பு அமைச்சர், தமிழ்வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார், ஆய்வின் போது நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு
மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர் பா.மு.முபாரக், மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, உதகை நகர செயலாளர் ஜார்ஜ், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கதுல்லா, தொரை, பில்லன், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, எல்கில்ரவி, நகரமன்ற உறுப்பினர்கள் தம்பி இஸ்மாயில், ரமேஷ், விஷ்ணு, கஜேந்திரன், கார்த்திக், நகர துணை செயலாளர் கிருஷ்ணன், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பசவன், மகேஷ் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.