புதுச்சேரியில் பாஜகவின் மாவட்ட செயற்குழு கூட்டம்..!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியின் மக்கள் நல திட்டங்களையும் சாதனைகளையும் மக்களுக்கு தெரிவிக்கக் கூடிய வகையில் மே மாதம் 30-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் பாரதிய ஜனதா கட்சி நேற்று உழவர்கரை மாவட்டம் ,நகர மாவட்டம், வில்லியனூர் மாவட்டம், அரியாங்குப்பம் மாவட்டம், காரைக்கால் மாவட்டம் ஆகிய ஐந்து மாவட்டத்திற்கும் ஒரே நாளில் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
உழவர் கரை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமையிலும் நகர மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு தலைமையிலும் வில்லியனூர் மாவட்டம் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையிலும் அரியாங்குப்பம் மாவட்டம் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலும் காரைக்கால் மாவட்டம் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் துரை சேனாதிபதி தலைமையிலும் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டங்களிலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
நடைபெற்ற நான்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டத்திற்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக மாநில துணைத்தலைவர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதிகளின் தலைவர்கள் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் மாவட்டத்தில் உள்ள மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் அணி தலைவர்கள் பிரிவு பிரிவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயற்குழு கூட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் அவர்கள் பாரதப் பிரதமரின் 9 ஆண்டுகால சாதனைகளையும் மக்கள் நல திட்டங்களையும் மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் வீடு வீடாக சென்று தெரிவிக்க நிர்வாகிகள் முழு முயற்சி செய்ய வேண்டும். வரவுள்ள 2024 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைய செய்வதற்கான பணிகளை கிளைகளில் இருந்து துவங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நடைபெற்ற செயற்குழு கூட்டங்களில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்கள் பாரதப் பிரதமரின் 9 ஆண்டு கால நிறைவு ஆட்சியின் சாதனைகளையும் மக்கள் நலத் திட்டங்களையும் நிர்வாகிகள் எவ்வாறெல்லாம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என எடுத்துரைத்தனர்