மனைவியுடன் தகராறு. கிணற்றில் குதித்து கணவர் தற்கொலை

கோவை மாவட்டம்,பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 40) குடிப்பழக்கம் உடையவர். இதனால் இவருக்கும் மனைவி சுகன்யா என்ற கற்பகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரன் அங்குள்ள கோவில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்யபட்டது.எஸ். ஐ. தங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.