நீலகிரி மாவட்ட உதகை அனைத்து காவல் நிலையங்களில் குழந்தைகள் தின விழாவில் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடல்

நீலகிரி மாவட்ட உதகையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக 27 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளி
குழந்தைகளை காவல் துறையினருடன் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியின் மூலம்
காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல் துறையினரின் பணி மற்றும்
நிலையங்களில் உபயோகப்படுத்தப்படும் பதிவேடுகளை பார்வையிட அனுமதித்தும்,
அவற்றை பயன்படுத்தும் விதம் பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்தும், மேலும்
காவல் நிலையங்களில் அவசர உதவிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அவற்றை
கையாளும் முறை மற்றும் காவல் நிலையங்களில் உள்ள படைகலன்களை
பார்வையிட அனுமதித்தும் உபயோகிக்கும் முறை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இதன் காரணமாக பள்ளி மாணவ மாணவிகள் காவல் துறையினரிடம்
அச்சமில்லாமல் அனுக உறுதுணையாக இருக்கும். இந்த நிகழ்சியில் 47
பள்ளிகளிலிருந்து 2074 குழந்தைகள் கலந்துக் கொண்டனர். நீலகிரி மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நகர் மேற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற
நிகழ்சியில் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு காவல் துறையினரின் பணி
குறித்து எடுத்துரைத்தார். மற்றும் இந்த குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி வரவேற்கும் விதமாக குழந்தைகளுக்கும் காவல்துறைக்கும் நட்பு வளர குழந்தைகள் காவல்துறை இணைந்து குழந்தை தினத்தை கொண்டாட வேண்டும் என்பது தமிழக அரசின் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நிறைவேற்றப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட அனைத்து காவல் நிலையங்களில் குழந்தைகள் தின விழா அன்று கல்லூரி பள்ளி மாண மாண மாணவிகளுக்கு சிறப்பு ஆலோசனைகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகுவதனால் ஏற்படும் விளைவுகள், போதை பொருள் அடிமை, மற்றும் படித்து நல்ல வேலைக்கு போகக் கூடிய வயதில் காதல் என்னும் வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, மற்றும் போக்சோ சட்டத்தில் அகப்படாமல் இருக்க மாணவர்களுக்கு தெளிவான ஆலோசனைகள் அனைத்து காவல் நிலையங்களிலும் வழங்கப்பட்டது, நடைபெற்ற குழந்தைகள் தின நாள் விழா நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு காவல்துறையின் பயன்பாடுகள் விதிமுறைகள் உபயோக பொருட்கள் மற்றும் காவல்துறையின் அணுகுமுறைகளை குறித்து அறிந்து காவல்துறைக்கும் மக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் நட்பை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை கேட்டு கண்டறிந்தனர்,