தமிழ்நாடு நகராட்சி,மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்,துப்புரவு அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் மாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி,மாநகராட்சிகளில் இருந்து துப்புரவு ஆய்வாளர்கள்,துப்புரவு அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்க்கு மாநில தலைவர் திருவேற்காடு நகராட்சி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள் ராஜ் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் செந்தில் ராம்குமார் மற்றும் இளங்கோ முன்னிலை வகித்தனர். வெங்கடாசலம், ரங்கராஜ், திருப்பதி, ராஜரத்தினம், சுரேஷ், செந்தில்குமார்,குருசாமி , ரமேஷ், நல்லுசாமி,மணிவண்ணன் போன்றோர் கலந்து கொண்டு பேசினர். இறுதியாக முன்னாள் தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். இக்கூட்டம் குறித்து மாநில தலைவர் ஆல்பர்ட் அருள் ராஜ் கூறியதாவது, தற்போது அறிவிக்க பட்டு உள்ள காலிப்பணியிடங்க ளுக்கான நேரடியான நியமனம் என்பதை இச்சங்கம் ஆதரிக்கிறது. முறையான தேர்வு மூலம்,வெளிப்படையான நியமனம் என்பது அனைவரும் ஏற்று கொள்ள கூடியதே. அதே சமயம் துப்புரவு ஆய்வாளர்களின் கல்வி தகுதி என்பதில் உள்ள பிஎஸ்சி கெமிஸ்ட்ரி உடன் விலங்கியல் என்பதற்க்கு பதிலாக பிஎஸ்சி கெமிஸ்ட்ரி உடன் கணிதம் என்ற பழைய தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும். ஏன் எனில் பழைய தகுதியின் அடிப்படையில் தான் ஏறக்குறைய 700 மாணவர்கள் படித்து முடித்து தயார் நிலையில் உள்ளனர். எனவே சங்கத்தின் சார்பிலான இக்கோரிக்கையினை நகராட்சி நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
நிறைவேற்றபட்ட இதர தீர்மானங்கள் :
சம வேலை,சம ஊதியம் என்பதை கருத்தில் கொண்டு,நகராட்சி துப்புரவு அலுவலர் மற்றும் மாநகராட்சி துப்புரவு அலுவலர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டினை களைந்திட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு ஆய்வாளர்களின் பதவி உயர்வு துப்புரவு அலுவலர் என்பதோடு நின்று விடாமல் மண்டல அளவில்,மாநில அளவில் பதவி உயர்வு அளிக்க வேண்டும்
kPI என்ற புதிய முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தற்போது செயல் படுத்த பட்டு வர படுகிறது. நல்ல திட்டம் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனினும் பாதகமான அம்சங்களும்,செயல் படுத்த முடியாத விசயங்களும் இதில் உள்ளன. எனவே KPI முறையினை மீண்டும் மறு பரிசீலனை செய்து பாதகமான அம்சங்களை களைய முன் வர வேண்டும். நகராட்சி,மாநகராட்சிகளில்் உள்ள ஹெல்த் ஆபீசர் எனப்படும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்ந்த மருத்துவர்களை நியமனம் செய்வதை தடுத்திட வேண்டும். ஏற்கனவே அதே பணிகளை செய்திட துப்புரவு அலுவலர் பணியிடம் இருக்கும்போது, நகர்நல அலுவலர் என்ற பணியிடம் தேவை இல்லை. துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர்களின் ஊதியம் உயர்த்த பட வேண்டும். திரவ கழிவு மேலாண்மை திட்டத்தில் துப்புரவு ஆய்வாளர்,மற்றும் அலுவலர்களுக்கு என்று எந்த பணியும் ஒதுக்கப்பட வில்லை .பொறியாளர்களுக்கு தான் பணிகள் ஒதுக்க பட்டு உள்ளன. ஆனால் நடைமுறையில் துப்புரவு ஆய்வாளர்களுக்கே பணிகள் ஒதுக்க பட்டு உள்ளன. இதனை நகராட்சி நிர்வாகம் முறை படுத்த வேண்டும். அதே போல திட கழிவு மேலாண்மை திட்டத்திலும், பொறியாளர்கள், தான் மேற்கொள்ள வேண்டும் என்று உள்ளது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லாததால் , நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே வருங்காலங்களில் துப்புரவு பணி பொது சுகாதார பிரிவும், சேகரம் செய்த கழிவுகளை செயலாக்கம் செய்வது போன்ற பணிகளை பொறியியல் பிரிவும் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்
துப்புரவு ஆய்வாளர் ,துப்புரவு அலுவலர் என்கின்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு நகராட்சி சுகாதார அலுவலர், நகராட்சி சுகாதார அலுவலர் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும். துப்புரவு அலுவலர்களுக்கு ஆய்வு பணி மேற்கொள்ள ஜீப் வாகனம் வழங்க வேண்டும். 100%திடக்கழிவுகளை பிரித்தெடுப்பது, மக்கள் முழு ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் தான் சாத்தியம் என்பதால் , அந்த நிலை உருவாகும் முன்பே ,பிரிக்க முடியாத குப்பைகளை, இன்னர்ட்டுகளை சேர்ப்பிக்கும் இடங்களை மூடி விட முயற்சி எடுப்பது நடைமுறை சிக்கல்கள் உருவாக்கும் என்பதால், யதார்த்த நிலையினை புரிந்து கொண்டு , சில வருடங்களுக்கு இந்த யோசனையினை கைவிட தேர்தல் பணியில் இருந்து துப்புரவு ஆய்வாளர் மற்றும் அலுவலர்களுக்கு விலக்கு அளிக்க தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்திட வேண்டும். ஊரக பகுதிகளில் பணி புரியும் சுகாதார ஆய்வாளர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்க படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான வாகன படியினை உயர்த்திட வேண்டும். பணிஇட மாறுதலில் கவுன்சிலிங் முறையினை பின்பற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சி நிர்வாகத்துறையும், தமிழ்நாடு அரசாங்கமும் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கேட்டு கொண்டனர்.