கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தின் படி நடைபெறும் டெண்டர் அரசியல் தலையீடு காரணமாக மூன்று முறை ரத் தானதாக ஒட்டுமொத்த நகர்மன்ற உறுப்பினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர் இந் நிலை யில் அதை கண்டித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நகராட்சிகளில் மன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்படவேண்டும் எந்த வித அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது என்பதற்கிணங்க வால்பாறை நகராட்சியில் வளர்ச்சி பணிகள் அனைத்தும் நகர் மன்ற தலைவர் தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்கள். ஒப்புதலோடு எந்தவித இடையூறுமின்றி சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் திடீரென தர்ணாவில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் இந்த திடீர் தர்ணாவில் ஆளும் கட்சியான திமுக , அதிமுக ஆகிய ஒட்டுமொத்த நகர்மன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டது பொதுமக்களிடையே பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வளர்ச்சிப் பணிகள் செய்யவிடாமல் தடுத்து வளர்ச்சிப்பணிக்கானடெண்டரை ரத்து செய்யக்கூடாது என்றும் தர்ணா மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0