சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள் வாகனங்களில் மண்ணென்ணெய் நிரப்பிய பாட்டில்கள் வீசிய வழக்குகளில் புலன் விசாரணை நடத்தப்படுகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் விச்சு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். 100 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று டிஜிபி கூறியுள்ளார். மண்ணென்ணெய் பாட்டில் வீசிய சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கோவை மாநகரில் 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில கமாண்டோ படை பிரிவு, சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் என கூடுதலாக 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கடந்த 22-ம் தேதி தமிழ்நாட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி 11 பேரை கைது செய்துள்ளனர். என்ஐஏ கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 1410 பேர் கைதாகி பிறகு விடுவித்தனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறையில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சையில் பேருந்து மீது கல்வீசி சேதப்படுத்திய அரித்திரி, சலீம், சிறாஜீதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் அதிரடிப்படையின் 2 பிரிவுகள், மாநில கமாண்டோ படையின் 2 பிரிவுகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று டிஜிபி கூறியுள்ளார். சிறப்பு அதிரடிபடையின் 2 பிரிவுகள் உள்பட 3,500 போலீசார் கோவை மாநகரில் பாதுக்காப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.