மருதமலை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் பக்தர்கள் பீதி

கோவை அருகே உள்ள மருதமலை அடிவாரபகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி உலா வருகின்றன. இதனால் பக்தர்கள் கடும் பீதியில் உள்ளனர். இந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மருதமலை அடிவாரம் பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் மலைப்பாதை படிக்கட்டு வழியாக கோவிலுக்கு செல்லும் கதவை உடைத்து அட்டகாசம் செய்தன. மேலும்அங்குள்ள குப்பை தொட்டிகளை உடைத்து எரிந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைகள் சிதறி கிடந்தன. பின்னர் அங்கிருந்து காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றன. இதனால் கோவிலுக்கு வந்தவர்கள் காட்டு யானைகளின் அட்டகாசத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர். காட்டு யானைகள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டத்தை தடுக்க அதிகபட்ச மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.