மருதமலை படிக்கட்டில் மயங்கி விழுந்து ஐயப்ப பக்தர் பலி.

கோவை; விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பக்கம் உள்ளபனப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 46) இவர்அதே பகுதியைச் சேர்ந்த 50 பக்தர்களுடன் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். இதற்காக நேற்று மருதமலை கோவிலில் சாமி கும்பிட வந்தனர். படிக்கட்டு வழியாக ஏறி செல்லும்போது மணிகண்டனு க்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரைபரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.