ஆதாரங்கள் அழிப்பு?.. முதல்வர் ஸ்டாலின் அரசு மீது ஆளுநர் ரவி பகிரங்க குற்றச்சாட்டு…!

கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் வெடித்து சிதறிய இடத்தில் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள், ஆணிகள் உள்ளிட்டதை சிதறி கிடந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கை NIA-விடம் ஒப்படைப்பதில்நான்கு நாட்கள் தாமதம் செய்யப்பட்டதாகவும் இந்த பயங்கரவாத சதி திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அளிக்கப்பட்டதாகவும் ஆளுநர் ரவி நேரடியாக (ஸ்டாலின் அரசை) குற்றம் சாட்டியுள்ளார். கோவை சம்பவம் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்பதால் ஆளுநரே நேரடியாக தலையிடலாம். அப்படி இருக்க ஏன் அரசியல் கட்சித் தலைவர் போல் அவர் கருத்து கூறுகிறார் என கேள்வி எழுந்துள்ளது.