திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் மறுவாழ்வு முகாம் அருகில் ரூ 33.29 கோடியில் திருச்சி கிழக்குத் தொகுதி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணி திருச்சி – புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ 33.29 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். உடன் அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வெளிநாடு வாழ் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மொத்தம் 526 வீடுகள் கட்டப்படுகிறது. நான்கு பிளாக்குகளாக 131 வீடுகள் வீதம் 524 வீடுகள் கட்டப் படுகிறது. மற்ற இரண்டு வீடுகள் தனி வீடுகளாக அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 10.167 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் அமைகிறது. இந்த திட்டமானது இலங்கை மறுவாழ்வு தமிழர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0