திருச்சி; பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணியை (Jamboree) தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில பாரத சாரண – சாரணியர் கம்பீர அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.வைர விழா பெருந்திரளணி குறித்த அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறை வெளியீடு. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர் கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அசத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி (special Jamboree) விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த துணை முதலமைச்சருக்கு சாலையில் நின்று இருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். தொடர்ந்து விழா நடைபெறும் தொடக்க வாயிலிருந்து தாரை தப்பட்டை முழுங்க கரகாட்டம் ஆடியும், பெண்கள் முளைப்பாரி கையில் ஏந்தி துணை முதலமைச்சரை வரவேற்றார்கள். அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கம் வெளியே வைக்கப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவரின் திருவுருவச் சிலைக்கும், புகைப்படம் அரங்கம் உள்ளே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 500 -க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, ஒவ்வொரு புகைப்படத்திலும் நான்கிலிருந்து மூன்று புகைப்படங்கள் இடம் பெற்று ள்ளது, திருக்குவளை இல்லத்தில் அன்னை அஞ்சுகத் தாய்க்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய புகைப்படம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு உள்ளிட்ட கலைஞர் அவர்களால் தமிழ்நாட்டிற்க செய்த சாதனைகள் அடங்கிய சிறப்பு வாழ்ந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குளோபல் டெவலப்மென்ட் வில்லேஜை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பிறகு பாரம்பரிய முறைப்படி சாரண சாரணியரின் சார்பாக துணை முதல்வருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி (special Jamboree) விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கி வைத்து இலங்கை, மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில பாரத சாரண – சாரணியர் கம்பீரமாக அணி வகுத்து வந்தனர், அணி வகுப்பு மரியாதையை துணை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார் 20 ஆயிரம் பாரத சாரண – சாரணியர் எழுந்து நின்று அவர்கள் முறைப்படி கைதட்டி துணை முதமைச்சரை வரவேற்றனர். முதலாவதாக தமிழ்நாடு பாரத சாரண – சாரணியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள்…. வைர விழா பெருந்திரளணி குறித்த சிறப்பிதழ் மற்றும் அஞ்சல் உறையை துணை முதலமைச்சர் வெளியிட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0