பா.ஜ.க தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்து உத்தரவை இன்று பிற்பகலுக்குள் மறுபரிசீலனை செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டு உள்ளது. கோவையில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் ப்ரொபஷனல் இன் *பாலிடிக்ஸ் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு கோவை உதவி தேர்தல் அதிகாரி அனுமதி வழங்க மறுத்துவிட்டால் இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தர்மராகவன் என்பவர் அவசர வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்து உத்தரவை தேர்தல் நடத்தை விதிகளின்படி மறுபரிசீலனை செய்து பிற்பகலுக்குப் பின் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என விளக்கம் அளித்தார். காவல்துறை தரப்பில் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை ஏற்பட்டது. எனவே தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்வதாக இருந்தால் காவல்துறை தரப்பில் கருத்துக்களை கேட்க வேண்டும் என்றும் கூறினார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி புத்தகத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் இருந்தால் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பது குறித்து பரிசீலிக்கலாம் ஆனால் உள்ளடங்கில் நடக்கக் கூடிய நிகழ்ச்சி சட்ட – ஒழுங்கு காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல்துறை எதற்கு ? அரசு எதற்கு ? காவல் துறை சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டினால் அரசியல் சட்ட முடக்கம் என உத்தரவில் கருத்து தெரிவிக்க வேண்டிய நிலை வரும் என்றும் எச்சரித்தார். பின்னர் தேர்தல் ஆணைய உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதி இன்று சனிக்கிழமை மதியம் 1:30 மணிக்குள் அனுமதி மறுத்த உத்தரவை மறு பரிசீலனை செய்து புதிய உத்தரவை தேர்தல் அதிகாரி பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0