ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோபிசெட்டிபாளையம் ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சி .நஞ்சப்பா முன்னிலை வகித்தார்.

சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வ மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கல்லூரியின் முதல்வர் இந்நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கினார்.

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை மருத்துவர் திரு. செல்வம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
அவர் பேசுகையில் மாணவர்கள் எவ்வாறு தங்கள் உடல் நலம் பேணி காப்பது, தங்கள் வீடுகளை சுற்றி கொசுக்கள் உருவாவதை எவ்வாறு தடுப்பது பற்றி விளக்கமாக கூறினார்.
பின்னர் டெங்கு ஒழிப்பு பற்றிய உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னதாக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. கிருஷ்ணகுமார் வரவேற்புரை நல்கினார்.
இறுதியாக பேராசிரியை செல்வி. காயத்ரி நன்றியுரை நல்கினார்.