அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் இன்று கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம் முன்பு இன்று தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கவனயீர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சரவணமுத்து மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் இக்கூட்டத்தின் சார்பாக தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நிதி பற்றாக்குறை நாள் நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டுமாய் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய ஏழாவது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவை தொகையினை வழங்காமல் நிலுவையாகவே உள்ளதால் நிலுவையை தொகையினை வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னிலை உடையாளி மாவட்ட தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குபேந்திரன் செல்வம் மாவட்ட நீதி காப்பாளர் மற்றும் மாவட்டத் தலைவர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை விளக்க உரை   முகமதுஅலி ஜின்னா  கார்த்திகேய வெங்கடேசன் முத்தழகு ஆகியோர் கலந்து கொண்டனர்.