திருச்சி சர்வதேச விமான முனையத்தின் உள்ளே ஆட்டோக்கள் செல்ல அனுமதிக்க கோரி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது. திருச்சி விமான நிலையம் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு அருகே அனைத்து திருச்சி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வா கிகள் ஒருங்கிணைந்து இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏர்போர்ட் கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பீர்முகமது, துணைத் தலைவர் சேகர், துணை செயலாளர் சகாயராஜ், முருகேசன், மணிகண்டன், விடுதலை விக்கி, ரவிக் குமார், பஷீர், காசிம், பிலால், மணலி தாஸ், ஜீவா, லதா, செந்தில், செழியன், ஆதி நாரயண மூர்த்தி உள்பட ஏராளமா ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொது செயலாளர் கோவன் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் பழனி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஊடகப் அணி பிரிவை சேர்ந்த பிரதீப் நன்றி கூறினார் இந்த ஆர்பாட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0