இந்தியாவின் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரை இழிவாக பேசினார் என்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை; இந்தியாவின் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரை இழிவாக பேசினார் என்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது அதன் ஒரு பகுதியாக சூலூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பிலும் சூலூர் நகர திமுக, மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் சூலூர் கலங்கள் ரோடு சந்திப்பில் உருவப்படம் எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பசுமை நிழல் விஜய்குமார் கண்டன கோஷங்களை எழுப்பினார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய,,நகர,திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சூலூர் நகர செயலாளர் கௌதம் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார்.