உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூக்கல், எப்ப நாடு மற்றும் உல்லத்தி கிராமத்தைச் சார்ந்த சிரியூர், ஆனைகட்டி மற்றும் இந்திரா நகர் ஆதிவாசி பொதுமக்கள் பயன்படக்கூடிய முக்கிய சாலை பல வருடங்களாக சாலை சீரமைக்காமல் இருந்தது, தற்போது பிரதம மந்திரி நிதியிலிருந்து பெறப்பட்டு தமிழக அரசு அமைத்துக் கொண்டிருக்கின்ற வாழைத்தோட்ட முதல் சீரியூர் வரையிலான சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது, ஆனால் தற்சமயம் சாலையின் அகலமானது, வெறும் மூன்று மீட்டர்களே அமைக்கப்படுவதால் வாகனங்கள் செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் என்பதாலும் , அரசாங்கம் அளித்துள்ள அளவு மூன்றே முக்கால் மீட்டர் அகலம் என்று இருந்தும் அதை சரியாக அமல்படுத்தவில்லை என்று கூறி ஆதிவாசி மக்கள் போ ராட்டத்தில் இறங்கினர்.  இதன் முதற்கட்டமாக பணிகளை நிறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவு செய்துள்ளனர், இதனால் அப்பகுதியில் வசித்து வரும் ஆதிவாசி மக்களி டையே மிகுந்த கொந்தளிப்பையும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதியில் உள்ள அனைத்து ஆதிவாசி மக்கள் தற்போது போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதனால் பகுதியில் நடைபெற்று வந்த சாலைப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.