பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனு

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனு வைக்கும் நாள் நாளை நடக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் நிரந்தர ஓய்வூதியம் பழைய ஓய்வூதியம் அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை தொழிற்சங்க படி டாஸ்மாக்
பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மனு வைக்கும் இயக்கம் சார்பாக அனைத்து துறை பணியாளர்கள் நாளை 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆயிரக்கணக்கில் சென்னை மெரினா கடற்கரையே தினரும் அளவிற்கு கூடுகின்றனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல் துறை ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தூர் ஏற்பாடு செய்து உள்ளார்..